Saturday 26 August 2017

தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவா?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பதிவு பெரியது. படிக்காமல் பயன்பெற உபயோகிக்கவும் சுத்தமான தேங்காய் எண்ணெய்..
தேவை எனில் தொடர்புகொள்ளவும்.( தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இரண்டும்)
பலவித பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் தேங்காய் எண்ணெய்!!!
பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எண்தணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இல்தலை.
தே‌ங்கா‌ய் எண்்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இல்தலை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.
தேங்காய் எண்ணெய் இரண்டு அம்டங்கு ஒரு ‘ மாய்ஸரஸர் ‘ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெயைத் தடவி பயனடையலாம்.
* தேங்காயெண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மஸாஜ் செய்தபின் உங்கள் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏர்படாமல் தடுக்கமுடியும்.
* நீங்கள் அரோமாதெரஃபிக்காக ஒரு ‘ஸ்பா’ வைத் தேடி ஓடவேண்டியதில்லை. உங்கள வீட்டிலேயே, தேங்காயெண்ணையைத் தனியாகவோ அல்லது மற்ற ஆயில்களுடன் கலந்தோ மஸாஜ் செய்துகொள்ளலம். அதிக பணிச்சுமையினால் ஏற்பட்ட களைப்பும், மன அழுத்தமும் குறையும். தூக்கமின்மையால் கஷ்டப்படுவோருக்கும் இது நல்ல பயனளித்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
* தேங்காயெண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணுயை சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் தேங்காயெண்ணெயை மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும்.
* பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காயெண்ணெயை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், , சிறிது நாட்களிலேயே பற்கள் மின்னுவதைப் பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங்சோடாவையும் கலந்துகொள்ளலாம்.
* ஓடும்போது தசை இழுத்துக்கொண்டு குதிகால் பிடித்துக்கொண்டதா? கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் காலை சிறிது நேரம் வைத்து , பின் கதகதப்பான தேங்காய் எண்ணெயால் மஸாஜ் பண்ணி, காலை ஒரு சாக்ஸினுள் வைத்து அசையாமல் சிறிதுநேரம் அமர்ந்திருகக்வும். உங்கள் கால்கள் பழைய நிலையை அடையும். ஓட்டப் பந்தய வீரர்களுக்கு நரம்புகளுக்கு இந்த மஸாஜ் நல்ல பயனளிக்கும்.
* தேங்காயெண்ணெய் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். மாஸாஜ் ரத்தஓடட்த்தை சீராக்கும்.
* தேகாயெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன் எடுத்து வைட்டமின் சி மற்றும் டி- யுடன் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரக்க உதவும். குழந்தைகளுக்கு மஸாஜ் செய்து வந்தால், விரல்கள் பலமடையும்; மற்றும் தோல் மிருதுவாகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால், கருப்பைக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்கும்.
* தேவையானவற்றை நன்றாக பொறிக்கும் திறன் மட்டுமின்றி, உடனடியாக சக்தியை அளிக்கவல்லது. ஆனால் சக்தியை தேக்கிவைத்துக்கொள்வதில்லை. இதன்மூலம் சர்க்கரை நோய் கொலாஸ்ட்ரல் முதலிய பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும்
* மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து . விடுபட, தண்ணீருடன் வேப்பிலை கற்பூரம் மற்றும் தேங்காயெண்ணெயைச் சூடாக்கி தேவைப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்தால், மூட்டைப் பூச்சித் தொல்லை ஒழியும். மேலும் தேங்காயெண்ணெயுடன் புதினா எண்ணெயைக் கலந்து தடவினால், கொசுக்கடி மற்றும் மூடடிப்பூச்சிக்கடியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளிலிருந்து விடுபடலாம்.
* வாணலியில் சிறிது தேங்காயெண்ணெயைத் தடவினால்,உணவுப்பொருள்கள் வாணலியில் ஒட்டாமல் வரும். சமையலறையில் உபயோகிக்கும் மிக்ஸி மற்றும் க்ரைண்டரில் உள்ள மோட்டாருக்கு தேங்காயெண்ணெய் போட்டு வைத்தால், அவற்றின் கண்டிஷன் நன்றாக இருக்கும்.
குழந்தைகள் பிறந்து ஓரிரு மாதங்கள் ஆனவுடனேயே கிராமங்களில் தாதியர் அல்லது நம் வீட்டில் உள்ள பாட்டிமார், குழந்தைகளுக்கு காலை நேரத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைப் பார்த்திருப்போம்.
பொதுவாக குழந்தைகளின் மிருதுவான தோல் பகுதியை தேங்காய் எண்ணெய் மேலும் மென்மையாக்குவதுடன், பூச்சிக்கடி அல்லது கொசுக்கடி போன்றவை இருப்பின் அவற்றின் பாதிப்பில் இருந்து எண்ணெயில் உள்ள கிருமி நாசினி பாதுகாக்கிறது. தவிர, குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் மசாஜ் முக்கியப் பங்காற்றுகிறது.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு மூட்டு மற்றும் தசை வலிகள் ஏற்பட்டுள்ள இடங்களில் மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தசை மற்றும் மூட்டு வலிகளால் நீண்ட காலம் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் தேங்காய் எண்ணெய் மசாஜை செய்து நிவாரணம் பெற்றிடுங்கள்.
உங்கள் அக்குள் பகுதிகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தடவினால் போதும், உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தால் நீங்கள் சந்திக்க போகும் அவமானங்களை தடுக்கலாம்.
உங்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டால், காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சியான ஒன்றை உடனே போடவும். அதன் பின், தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடங்களில் நிறைய ஊற்றிக் கொள்ளவும். வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வரை, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவவும். சொல்லப்போனால், தழும்புகளை குறைக்கவும் கூட தேங்காய் எண்ணெய் உதவிடும்.
டையப்பர் சிராய்ப்புகளால் உங்கள் குழந்தை படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க பாதுகாப்பான வழியாக தேங்காய் எண்ணெய் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், டையப்பர் சிராய்ப்புகளை தடுக்க சிறந்த வழியாக விளங்குகிறது தேங்காய் எண்ணெய். டையப்பர் மாற்றும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி விடவும்.
நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொண்டால், உடலின் செயற்பாடுகள் சீராகும். இதனால் தேவையான தூக்கத்தை அது தூண்டி விடும்.
நம் அனைவருக்கும் காதில் அழுக்கு சேர்வது இயற்கையே. ஆனால் சில நேரம் அது அதிகமாக சேர்ந்து காதை விட்டு எடுக்க சிரமமாகி விடும். அப்போது ஒரு சொட்டு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். காதிற்குள் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை நேராக ஊற்றுங்கள். இது காதிலுள்ள அழுக்கை தளர்த்தும். இதனால் அது தானாகவே வெளிவந்து விடும்.
தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கும் அதிக நன்மையை அளிக்கிறது. இயற்கையான மாய்ஸ்சுரைசராக விளங்கும் இது உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளித்திடும். அமைதிப்படுத்தும் பண்பை கொண்ட தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால், சீக்கிரமே வயதாகும் செயல்முறையை எதிர்த்து போராடும். குழந்தையை போன்ற மென்மையான சருமம் வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெய்யை கொண்டு வாரம் இருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். உங்கள் உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தோல் உரிதல் தேங்காய் எண்ணெயை வைத்து தோல் உரிதலுக்கு நாமாகவே மருத்து செய்யலாம் உங்களுக்கு தெரியுமா? அதற்கு ஒரு பௌலில் இரண்டு மேஜைக்கரண்டி சீனியுடன் மூன்று மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். ஒரு ஜாடியில் போட்டு வைத்து விட்டால், தோலை வறட்சியடையச் செய்து, தோல் உரிதலை கட்டுப்படுத்தும் விலையில்லாத மருந்தை நாமாகவே செய்யலாம். அதுமட்டுமல்லாது தொடுவதற்கு உங்கள் மேனி மிகவும் மென்மையாகவும், நல்ல நறுமணமாகவும் இருக்கும்.
மேக்கப் ரிமூவர் மேக்கப்பை நீக்குவது வலியானது, அதிலும் நீர்க்காப்பு கொண்ட மேக்கப்பாக இருந்தால் அசைவது கடினம். ஆனாடல் தேங்காய் எண்ணெய் இது போன்ற அலங்காரங்களை முகத்திலிருந்து எளிதாக நீக்கிவிடும். கூடுதல் ஊக்கமாக இது உணர்ச்சியுள்ள முகதோலுக்கு மென்மையையும், தோலின் நீர்த்தன்மையைக் கூட்டுகிறது.
சில நேரம் தேங்காய் எண்ணெய் முழு மேனியின் மாய்ஸ்சுரைசராக பயன்படும். இது லோஷனை விட பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும் குளித்து முடித்த பின் எண்ணெயை உடல் முழுவதும் தடவுங்கள், அல்லது தொல்லை உள்ள இடத்தில் தடவுங்கள். உடனடியாகவே உங்கள் மேனி மிருதுவாகவும், வழுவழுப்பாகவும், ஒளி வீசவும் காண்பீர்கள்.
வாசனை திரவியம் மக்களை அக்குளுக்குள் தேங்காய் எண்ணெயை தடவ சொல்லவில்லை. திறமையானவர்கள் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்த்து வாசனை திரவியமாக பயன்படுத்துவர். வெண்ணெய், கூழாங்கிழங்கு, ஆப்ப சோடா உப்பு, தேங்காய் எண்ணெய் அனைத்தையும் கலந்தால் 100% இயற்கையான வாசனை திரவியம் கிடைக்கும்.
கால் மற்றும் கை பாதுகாப்பு தினமும் தேங்காய் எண்ணையை சருமத்தில் தடுவுவதால் நகங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் ஆகிறது. வறண்ட, பாத வெடிப்புக்கு தினமும் படுக்க போகும் முன் தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், உங்கள் கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து பார்க்க அழகாக இருக்கும்.
குளிர்புண் தீர்வு வறண்ட மற்றும் வெடித்த உதடுகளை காட்டிலும் மோசமான ஒன்று உள்ளது என்றால் அது தான் குளிர்புண். இந்த போரில் கலந்து கொள்ள இதோ தேங்காய் எண்ணெய் உள்ளது. இயற்கையான ஈரப்பதத்தைத் தந்து, தொற்றுலிருந்து காக்கிறது. இதோடு மட்டுமல்லாது, உங்களின் உணர்ச்சியான உதடுகளை மென்மையாக்கவும் செய்யும்.
வெப்பமான கோடை காலத்தில் அழையாமல் வருவது வேனிற்கட்டி. இதோ அதிர்ஷ்டவசமாக தேங்காய் எண்ணெய் மறுபடியும் நம்மை காக்க வந்துவிட்டது. அதிக நேரம் சூரிய கதிரின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.
குளிர்காலத்தில் உள்ள கடுமையான குளிரால் கூந்தல் கடினமாகிறது. தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வு, பொடுகு, வலுவற்ற கூந்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. அதற்கு காரணம் மேல்கூறியது போல் அதில் உள்ள லாரிக் அமிலம் தான். இதயத்திற்கு மட்டும் அல்லாது, கூந்தலில் உள்ள புரதத்திற்கும் இது பெரும் தொடர்புடையது.
கூந்தலிலுள்ள காய்ந்த இழைகளை மிருதுவாக்குகிறது. குளிப்பதற்கு 30-40 நிமிடங்களுக்கு முன் முடி முதல் வேர் வரை சமமாக தடவ வேண்டும். இதனால் கூந்தல் பார்ப்பதற்கே மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு மட்டுமல்லாது கூந்தல் உதிர்வும் குறையும்.
தேங்காய் எண்ணெயில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 50% உலோரிக் அமிலம் உள்ளது. உலோரிக் அமிலம் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியவை வராமல் பாதுகாக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம், முக்கியமாக இடைநிலைசங்கிலி கொழுப்பமிலம் (mcfa) செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த அமிலத்தை உடல் விரைவாக ஈர்த்து, செரிமானத்திற்கு குறைந்த அழுத்தத்தையும், வேலையையும் அளிக்கிறது. இதனால், உங்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும். அதோடு தேங்காய் எண்ணெயால் ஆற்றல் முறிவு ஏற்பட்டு உடல் எடை குறைகிறது. எப்படிப் பார்த்தாலும் வெற்றி தான்!

Friday 25 August 2017

தொடக்கம் இயற்கையுடன்...

இதுகாறும் பயணித்த நாட்களை எண்ணாது, இனிவரும் யாவையும் இயற்கையோடு ஒன்றியதாக இருக்க எண்ணிய எண்ணங்களின் தொடக்கமே
Gifts -N-Green .

இணைந்திருங்கள் இயல்பாக இணையும் உறவுகளே..

என்றும் அன்புடன்...

அ. ராஜ்குமார்
99529 46997 / 88254 49611.
E-mail: raj2577kumar@gmail.com